உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருமுருகன்பூண்டி நகராட்சியில் கூடுதல் பணியாளர்கள் நியமனம் - அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்

Published On 2021-12-22 06:35 GMT   |   Update On 2021-12-22 06:35 GMT
தற்போதைய நிலையில் ஒரு அலுவலக எழுத்தர், ஒரு பில் கலெக்டர் மட்டுமே உள்ளனர்.
அவிநாசி:

திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக வார்டு வரையறை பணிகள் நடந்தது. 27 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில் ஏற்கனவே 15 வார்டுகள் உள்ளன.

தற்போது 27 வார்டாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினரிடம் ஆட்சேபனை பெறும் கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், வார்டு வரையறை குளித்து விளக்கமளித்தார்.

அரசியல் கட்சியினர் கூறுகையில்: 

பூண்டி பேரூராட்சி இரண்டாம் நிலை நகராட்சி அந்தஸ்து பெற்ற போதும் இங்கு பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை, இரண்டாம் நிலை பேரூராட்சி அளவில் மட்டும் தான் உள்ளது.

இரண்டாம் நிலை பேரூராட்சிக்கு அடுத்து முதல் நிலை, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை என பேரூராட்சி அளவிலேயே மூன்று அந்தஸ்துகளை இந்நகராட்சி கடந்து வந்த போதும் ஊழியர் எண்ணிக்கை உயர்த்தப்படவே இல்லை. அதற்கான முயற்சியை அப்போதைய உள்ளாட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ எடுக்காதது வியப்பளிக்கிறது.
 
தற்போதைய நிலையில் ஒரு அலுவலக எழுத்தர், ஒரு பில் கலெக்டர் மட்டுமே உள்ளனர். ஓரிரு பணியாளர்களை மட்டுமே வைத்து மிகக் குறுகிய இடைவெளியில் வார்டு வரையறை பணிகளை செய்து முடிக்க உயரதிகாரிகள், அறிவுறுத்தி உள்ளதால் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.

நகராட்சி கமிஷனர் பணியிடம் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பொறியாளர், நகரமைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட நகராட்சிக்குரிய பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக அரசாணை வந்த பிறகே பணியிடங்கள் நிரப்பப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News