உள்ளூர் செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

Published On 2021-12-15 15:10 IST   |   Update On 2021-12-15 15:10:00 IST
கிருஷ்ணகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அப்போது புகையிலை பொருட்கள் விற்றதாக கொல்லகொட்டாய் மாரியப்பன் (வயது 35), குப்பச்சிபாறை வைகுண்டன் (48), யானைக்கால்தொட்டி சுப்பிரமணி (45), கர்னூர் சின்னராய ரெட்டி (70), தளி அருகே உள்ள முத்தூர் ரவி (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.680 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News