உள்ளூர் செய்திகள்
தற்கொலை

தளி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-12-13 17:05 IST   |   Update On 2021-12-13 17:05:00 IST
தளி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தளி அருகே உள்ள தொட்ட உப்பனூரை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 68). கூலித்தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணப்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News