உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊராங்காணி சுடுகாடு பகுதியில் அதே ஊரை சேர்ந்த தங்கராசு (வயது 41), ராஜீவ்காந்தி ( 38) ஆகியோர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.