உள்ளூர் செய்திகள்
விவசாயி பலி

மூங்கில்துறைப்பட்டு அருகே தேள் கடித்து விவசாயி பலி

Published On 2021-12-11 16:32 IST   |   Update On 2021-12-11 16:32:00 IST
மூங்கில்துறைப்பட்டு அருகே தேள் கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் ராஜேந்திரன் (வயது 40). சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கடித்து விட்டது. இதில் வலியால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News