உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது

Published On 2021-12-08 10:59 IST   |   Update On 2021-12-08 10:59:00 IST
கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் போலீஸ் சரகம் வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தியாகதுருகத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் டிராக்டர் டிரைவர் வெங்கடேசன் (வயது 23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் வெங்கடேசன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதற்கிடையில் அந்த சிறுமி கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறையின்போது, கேரள மாநிலம் மாகி பகுதிக்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கேரள மாநிலம் மாகி போலீஸ் நிலையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. மாகி போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி அங்கு வழக்குப்பதிவு செய்து, அந்த வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மாற்றியுள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வழக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் 16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய டிராக்டர் டிரைவர் வெங்கடேசன் என்பவரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News