செய்திகள்
மாநில தலைவர் கோபிநாத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய காட்சி.

திருப்பூரில் இந்து முன்னேற்றக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2021-11-23 09:39 GMT   |   Update On 2021-11-23 09:39 GMT
உள்ளாட்சி தேர்தலில் இந்து முன்னேற்ற கழகம் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர்:

இந்து முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹரிஹர சுதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் கோபிநாத் கலந்து கொண்டு இயக்கத்தின் வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, உள்ளாட்சி தேர்தலில் இந்து முன்னேற்ற கழகம் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் அமைப்பு நிர்வாகிகள் மணி, உதயகுமார், சம்பத்குமார், தங்க தமிழ்ச்செல்வன், சாஜன், ரஞ்சித் குமார், விக்னேஷ், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News