செய்திகள்
மழை

சங்கராபுரம் அருகே பலத்த மழைக்கு பள்ளி சுவர் இடிந்தது

Published On 2021-11-21 13:03 IST   |   Update On 2021-11-21 13:03:00 IST
சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலை பள்ளி சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.

இதேபோல் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் வட்டத்துக்கு உட்பட்ட 56 கிராமங்களிலும் ஏரி, குளம் நிரம்பியதால் உபரிநீர் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர் மழை காரணமாக ஒருசில இடங்களில் வீடுகள் இடிந்தவண்ணம் உள்ளது. அதன்படி சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் அரசு மேல்நிலை பள்ளி சுவர் இன்று காலை இடிந்து விழுந்தது. தொடர்மழை காரணமாக சுவர் நனைந்து காணப்பட்டதால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

பள்ளி விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள் விபத்திலிருந்து தவிர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் கல்விதுறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு வருகிறார்கள். 
Tags:    

Similar News