செய்திகள்
அமராவதி அணை

அமராவதி அணையின் நீர்மட்டத்தை துல்லியமாக கணிக்க புதிய கருவி

Published On 2021-11-12 12:50 IST   |   Update On 2021-11-12 12:50:00 IST
அணையில் இருந்து ஆற்று வழியாகவும் பிரதான கால்வாய் மூலமும் கல்லாபுரம், ராம குளம் வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
உடுமலை:

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் கரூர் மாவட்டங்களில் சுமார் 55,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 90 அடி உயரம் கொண்ட அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை முக்கிய நீராதாரமாக உள்ளது. பாம்பாறு, கூட்டாறு ,தேனாறு வழியாக தூவானம் அருவியை கடந்து அணைக்கு தண்ணீர் வருகிறது.

அணையில் இருந்து ஆற்று வழியாகவும் பிரதான கால்வாய் மூலமும் கல்லாபுரம், ராம குளம் வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம், நீர்வரத்து வெளியேற்றம் ஆகியவற்றை அளவிட அணையின் மானிட்டர் உள்ளது. 

இந்தநிலையில் அணையின் மேற்பகுதியில் தண்ணீரை தொடாத வகையில் சென்சார் மூலம் இயங்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் துல்லியமாக நீர் மேலாண்மையை மேற்கொள்ள முடியும். அதிகாரிகள் அணைக்கு சென்று நீர் மட்ட விவரத்தை அறிய வேண்டியதில்லை.

தானியங்கி முறையில் இணைக்கப்பட்ட அதிகாரிகளின் செல்போனுக்கு நீர்மட்டம் விவரம் கிடைத்துவிடும். சென்னையிலிருந்து இதை அறிந்து கொள்ள முடியும் என நீர்வள ஆதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News