செய்திகள்
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது
15 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி வாலிபர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டை வாசல் மேல வீதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 26). இவர் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இவர் வடகடல் பகுதியைச் சேர்ந்த தத்தனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. சிறுமியை கர்ப்பமாக்கிய விக்னேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகிறார்.