செய்திகள்
கொள்ளை

தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2021-11-06 09:33 GMT   |   Update On 2021-11-06 09:33 GMT
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற ஆசிரியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலேரி பாளையத்தை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 38). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 3-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான பழனி அருகே உள்ள கீரனூருக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின் கம்மல், மோதிரம் உள்பட 12 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

நேற்று வீட்டிற்கு வந்த சபரிநாதன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சபரிநாதன் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை புதிவு செய்தனர்.

இதனை வைத்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற ஆசிரியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News