செய்திகள்
தேர்தல் நடைபெற்ற காட்சி.

பல்லடத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்க தேர்தல்

Published On 2021-11-02 08:01 GMT   |   Update On 2021-11-02 08:01 GMT
கரூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர் பாலசுப்பிரமணி தேர்தல் நடத்தும் அலுவலர் பொறுப்பில் தேர்தலை நடத்தினார்.
பல்லடம்:

பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தேர்தல் நடைபெற்றது. கரூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க உறுப்பினர் பாலசுப்பிரமணி தேர்தல் நடத்தும் அலுவலர் பொறுப்பில் தேர்தலை நடத்தினார்.

இதில் மாநில தலைவர், துணைத் தலைவர் மற்றும் மாநில செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில தலைவருக்கு மஞ்சள் வண்ணத்திலும், துணை தலைவருக்கு இளம் சிவப்பு வண்ணத்திலும், மாநில செயலாளருக்கு பச்சை வண்ணத்திலும், வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 236 பேரில் 206 பேர் வாக்களித்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டியை சீல் வைத்தனர். பின்னர் வாக்குப் பெட்டி திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
Tags:    

Similar News