செய்திகள்
பட்டாசு

தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

Published On 2021-11-01 17:45 IST   |   Update On 2021-11-01 18:40:00 IST
கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தீபாவளி திருநாள் அன்று அதிக அளவில் பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. இதன் காரணமாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

அவ்வகையில் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு கூறி உள்ளது. 

காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News