செய்திகள்
வாலாஜாவில் கூட்டுறவு அங்கன்வாடியில் ரூ.54 ஆயிரம் திருட்டு
வாலாஜாவில் கூட்டுறவு அங்கன்வாடியில் ரூ.54 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோட்டில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்ளது. இந்த சிறப்பு அங்காடி கட்டுப்பாட்டில் 10 ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன.இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ரூ.54 ஆயிரத்து 690 பணம் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி பூட்டை உடைக்கப்பட்டு கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்றது கண்டு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கிளை மேலாளர் மோகனவேல் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர் செல்வி தடயங்களை சேகரித்து சென்றனர்.