செய்திகள்
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன தரச்சான்று பெற அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு லட்சுமிகாந்தன் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடமும், அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 3 மணியளவில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்று இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.