செய்திகள்
நெமிலி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
நெமிலி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ளறனர்.
நெமிலி:
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் காணாமல் போவதாக நெமிலி போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் தனிப்படை போலீசார் நெமிலி கீழ்வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் வெளிதாங்கிபுரம் மேல் காலனியை சேர்ந்த மாதவன் (வயது 21) என்பதும், அவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை நெமிலியை சேர்ந்த சுந்தரேசன் மற்றும் புதுப்பட்டு அருகே கங்காதரநல்லூரை சேர்ந்த வாசுதேவன் ஆகியோருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.