செய்திகள்
பணம்

புதுவை அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

Published On 2021-10-27 02:49 GMT   |   Update On 2021-10-27 02:49 GMT
புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.800 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
புதுச்சேரி:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது. இது ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான அக விலைப்படி உயர்வுக்கான நிலுவைத்தொகை வருகிற நவம்பர் மாதம் வழங்கப்படும்.

இதன்மூலம் புதுவை அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.800 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.

இதற்கான உத்தரவை நிதித்துறை சார்பு செயலாளர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பஞ்சப் படியை உயர்த்தி அரசாணை வெளியிட்ட 24 மணி நேரத்துக்குள் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அதனை அமல்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News