செய்திகள்
வீடு,வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

வேளாங்கண்ணி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணி

Published On 2021-10-20 13:05 GMT   |   Update On 2021-10-20 13:05 GMT
வேளாங்கண்ணி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:

நாகை. மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் ஆகியோரின் உத்தரவுப்படியும், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி ஆலோசனையின்படியும் வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது.

இப்பணியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள டெங்கு களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று உடைந்த பாட்டில்கள், முட்டை ஓடு, தேங்காய் சிரட்டை, டயர், உடைந்த மண்பாண்டங்கள் உள்ளிட்ட தண்ணீர் தேங்க கூடிய பொருட்களை அகற்றினர். மேலும் கொசு மருத்து தெளித்தனர்

பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்கி ஏ.டி.எஸ். கொசுகள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் வராமல் காத்திட தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்புறமும், பூத்தொட்டிகளிலும் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி செயலாளர் பொன்னுசாமி தெரிவித்தார்.இப்பணியில் சுகாதார ஆய்வாளர் மோகன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News