செய்திகள்
கைது

பாணாவரம் அருகே ஆட்டோவில் மது கடத்திய மூதாட்டி உட்பட 2 பேர் கைது

Published On 2021-10-05 16:31 IST   |   Update On 2021-10-05 16:31:00 IST
அக்டோபர் 4-ந் தேதியிலிருந்து 9-ந்தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந்தேதியும், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
பாணாவரம்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, அக்டோபர் 4-ந் தேதியிலிருந்து 9-ந்தேதி வரை தொடர்ச்சியாக 6 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந்தேதியும், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பாணாவரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு பாணாவரம்-நெமிலி சாலையில் உள்ள கூத்தம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 411 மது பாட்டில்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க மொத்தமாக வாங்கிச் சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்த குப்பம்மாள் (வயது 70), பாணாவரம் நெமிலி ரோட்டை சேர்ந்த ராஜேஷ் (30) ஆகிய 2 பேரை கைது செய்து, ஆட்டோ மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News