செய்திகள்
காவேரிப்பாக்கம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
காவேரிப்பாக்கம் அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் மாமண்டூர் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஓச்சேரி எம்.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 26) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சீனிவாசனை கைது செய்தனர்.