செய்திகள்
தற்கொலை

திமிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-09-28 14:09 IST   |   Update On 2021-09-28 14:09:00 IST
திமிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் கூலி தொழிலாளி. இவரது மனைவி நவமணி (வயது 30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நவமணி உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திமிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News