செய்திகள்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

பஸ்களில் இலவச பயண திட்டத்தில் 26 கோடி பெண்கள் பயணம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்

Published On 2021-09-28 12:07 IST   |   Update On 2021-09-28 12:50:00 IST
100 நாள் வேலை திட்டத்தில் 100 நாளை 150 நாளாக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் போராடிக் கொண்டிருக்கிறார் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
அரக்கோணம்:

அரக்கோணத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா இருக்கும் இடத்தை தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் செய்துவிட்டார். இருந்தாலும் இப்போது 1 லட்சம் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. அதேபோல் மருத்துவ ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

100 நாள்வேலை திட்டத்தில் 100 நாளை 150 நாளாக உயர்த்த முதல்வர் போராடிக் கொண்டிருக்கிறார்.



அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் இதுவரை 26 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

போக்குவரத்து துறைக்கு 1,450 கோடி மானியமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.


Similar News