செய்திகள்
கொள்ளை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பூசாரியை தாக்கி கோவில் நகைகள் கொள்ளை

Published On 2021-09-25 10:26 GMT   |   Update On 2021-09-25 10:26 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் பூசாரியை தாக்கி கோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பூசாரி வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு செண்பகதோப்பு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் ஆராய்ச்சிப்பட்டி ராமசாமி, ஏ.முத்துக்குமார், மம்சாபுரம் செந்தில், விக்டர் ஆகியோர் ஆயுதங்களுடன் வந்துள்ளனர். அவர்கள் பூசாரியை தாக்கிவிட்டு கோவிலுக்குள் சென்று அங்கிருந்த போத்திராஜா மற்றும் பூதத்தார், திரவுபதி அம்மன் பீடங்களை சேதப்படுத்தியதோடு, அவற்றின் அடியில் இருந்த நவரத்தினங்களையும் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கோவில் பரம்பரை அறங்காவலர் செல்வராஜ் போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News