செய்திகள்
கோப்புப்படம்

பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: மாயமான வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2021-09-23 16:07 IST   |   Update On 2021-09-23 16:07:00 IST
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி பிளஸ்-2 மாணவியை பலமுறை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி தாயுடன் வசித்து வருகிறார்.

இவர் பள்ளியில் படிக்கும் போது ஆத்திக்குளத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 20) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காதலன் கேட்டுகொண்டதற்கிணங்க செல்போனில் தனது படங்களை மாணவி அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தெரியவந்ததும் மாணவியை தாய் கண்டித்தார். சரவணனை சந்திக்க வேண்டாம் என எச்சரித்தார். ஆனால் டைப் ரைட்டிங் வகுப்புக்கு சென்ற மாணவி சரவணனை சந்தித்து வந்துள்ளார்.

கடந்த 19-ந்தேதி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் டைப்ரைட்டிங் தேர்வு நடந்துள்ளது. இதில் மாணவி பங்கேற்றார்.

அப்போது அங்கு சரவணன் வந்துள்ளார். அவர் மாணவியை ஆத்திக்குளத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு பலமுறை மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சரவணன் திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சரவணன் திடீரென மாயமாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News