செய்திகள்
பூகம்பம் வருவதை எச்சரிக்கும் நவீன கருவியுடன் மணிமாறன்.

பூகம்பம் வருவதை எச்சரிக்கும் நவீன கருவியை உருவாக்கிய என்ஜினீயர்

Published On 2021-09-19 09:29 GMT   |   Update On 2021-09-19 09:29 GMT
பெங்களூர் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியரின் வழிகாட்டுதலின் படியே எர்த் குவாக் சென்சார் கருவியை உருவாக்கி உள்ளதாக என்ஜினீயர் தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவை ஏம்பலம் அருகே உள்ள தமிழக பகுதியான தெண்ணம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிமாறன். டிப்ளமோ எலக்ட்ரானிக் என்ஜினீயர்.

இவர் பூகம்பம் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்கூட்டியே அதனை கண்டுபிடித்து எச்சரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். அதற்கு எர்த் குவாக் சென்சார் என பெயர் வைத்துள்ளார்.

15 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இந்த நவீன கருவியை உருவாக்கியுள்ளார். இந்த கருவியில் 2 லட்சம் கோடிங் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கட்டுப்பாட்டு கருவிகள், தானியங்கி கருவிகள் ஆகியவையும் உள்ளது. இந்த கருவியை வைத்து பூகம்பம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து எச்சரிக்க முடியும்.

இந்த கருவியின் மூலம் பூமிக்கு அடியில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும். பூகம்பம் மட்டுமல்லாமல் இந்த கருவி உள்ள இடத்திலிருந்து 150 கிலோ மீட்டர் வரை ஈரப்பதம், வெப்பநிலை, பருவநிலை மாற்றம், காற்றின் தன்மை உள்ளிட்டவைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

எர்த் குவாக் கருவி, அதன் செயல்பாடுகள் குறித்து மத்திய அரக்கும், தமிழக அரசுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறேன். இத்தாலி உள்ளிட்ட அயல் நாடுகளில் கருவி பற்றி விளக்க என்னை நேரில் வந்து செய்து காட்டும்படியும் கேட்டிருக்கிறார்கள்.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு போதிய வரவேற்பு நமது நாட்டில் இல்லை. கருவியை ஆய்வுக்கு உட்படுத்தி பயன்படுத்தினால் இயற்கை சீற்றங்களை முன்னரே தெரிந்து பேரழிவை தடுக்க முடியும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்

பெங்களூர் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ராஜன் உதவி செய்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் படியே இந்த கருவியை உருவாக்கி உள்ளேன்.

இவ்வாறு மணிமாறன் தெரிவித்தார்.

Tags:    

Similar News