செய்திகள்
அண்ணாமலை

தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு: அண்ணாமலை

Published On 2021-09-06 02:44 GMT   |   Update On 2021-09-06 02:44 GMT
மகாராஷ்டிரா, புதுச்சேரி போல் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபாடு நடத்த அனுமதிக்கலாம்.
நெல்லை :

நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கொடுக்காமல் தமிழக அரசு பிடிவாதமாக இருக்க காரணம் என்னவென்று தெரியவில்லை. பாஜக தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 12-ந்தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகளை தங்களது வீடுகள் முன்பு வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இது தனிமனித உரிமை, இதை தடுக்க யாருக்கும் அனுமதியில்லை. மகாராஷ்டிரா, புதுச்சேரி போல் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். இன்னும் காலம் கடக்கவில்லை, வழிபாடு நடத்த அனுமதிக்கலாம்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது தொடர்பாக, நாளை (அதாவது இன்று) தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் பாஜகவும் கலந்து கொள்கிறது. அதன்பிறகு இந்த பிரச்சினை குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News