செய்திகள்
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

இன்று கிருஷ்ண ஜெயந்தி- கவர்னர் வாழ்த்து

Published On 2021-08-30 08:11 IST   |   Update On 2021-08-30 08:11:00 IST
தடுப்பூசி மூலம் கொரோனா எனும் நோயை அழிக்க அனைவரும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் உறுதி ஏற்போம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
புதுச்சேரி:

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த கிருஷ்ண பகவான் மக்களை காப்பதற்காக அசுரர்களை அழித்ததை போலவே தடுப்பூசி மூலம் கொரோனா எனும் நோயை அழிக்க அனைவரும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் உறுதி ஏற்போம். இந்த நாள் நம் அனைவரின் வாழ்விலும் ஒளிக்கூட்டும் நாளாக மட்டுமல்லாது, வழிகாட்டும் நாளாகவும் அமைய வேண்டும் எனக்கூறி அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News