செய்திகள்
கரும்பு தோட்டத்தில் இருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்த போது எடுத்த படம்.

பங்களாப்புதூர் அருகே விவசாய தோட்டத்தில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

Published On 2021-08-24 12:29 IST   |   Update On 2021-08-24 12:29:00 IST
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பங்களாப்புதூர் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பங்களாப்புதூர் அருகே புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். விவசாயி. மகேஷ் தோட்டத்தில் வழக்கம்போல் தோட்ட வேலையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது கரும்பு காட்டில் ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருந்தது. இதைக்கண்ட மகேஷ் அருகில் சென்று பார்த்த போது பெரிய அளவில் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் அருண் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் திருமுருகன் ஆகியோர் கரும்பு தோட்டத்தில் இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Similar News