செய்திகள்
கைது

பெருந்துறையில் மின் சாதன பொருட்களை திருடிய வாலிபர் கைது

Published On 2021-08-20 16:24 IST   |   Update On 2021-08-20 16:24:00 IST
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மின் சாதன பொருட்களை திருடியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:

பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பிரட் கம்பெனி இயங்காமல் இருந்து வந்தது. இந்த கம்பெனியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

தற்போது இந்த கம்பெனியை மீண்டும் இயக்க முடிவு செய்து உரிமையாளர்கள் துரைசாமி மற்றும் ஜெயமுருகன், தனபால் தங்கவேல் ஆகியோர் கம்பெனிக்கு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு ஒருவர் அமர்ந்து இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் பெருந்துறை, காஞ்சிக்கோவில் ரோடு இந்திரா வீதியை சேர்ந்த செல்வம் (வயது 48) என்பதும் சிப்காட்டில் உள்ள கம்பெனிகளில் எலெக்ட்ரீசியன் மற்றும் பிட்டர் வேலை பார்த்து வருவதாக கூறினார்.

இந்த கம்பெனியில் உள்ள மின்சாதன பொருட்களை திருட வந்ததாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக அறையில் இருந்த 6 பேன்கள், 2 மின் மோட்டார்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் காப்பர் ஒயர்கள் ஆகியவற்றை திருடி சென்றதாக அவர் கூறினார்.

இதையடுத்து பெருந்துறை போலீசில் துரைசாமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Similar News