செய்திகள்
தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்

தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் - வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-08-13 16:20 IST   |   Update On 2021-08-13 16:20:00 IST
மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில், 100 அடி சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மீன்சுருட்டி கடைவீதியின் இருபுறமும் 75 அடி மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க போதுமான இடம் இல்லாததால் வடிகால் வாய்க்கால் அமைக்காமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பெய்த மழையால் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் சென்று வருவதாலும், பொதுமக்கள் மழைநீரை மிதித்து கொண்டு செல்வதாலும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிேயாடு மீன்சுருட்டி கடைவீதி பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News