செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் மேலும் 81 பேருக்கு கொரோனா

Published On 2021-08-06 09:27 IST   |   Update On 2021-08-06 09:27:00 IST
புதுவையில் கொரோனா பாதிப்பு என்பது சோதனை எண்ணிக்கையில் 1.36 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.79 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 81 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 167 பேர், வீடுகளில் 721 பேர் என 888 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றைய தினம் 100 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் புதிதாக உயிரிழப்பும் பதிவாகவில்லை.

புதுவையில் கொரோனா பாதிப்பு என்பது சோதனை எண்ணிக்கையில் 1.36 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.79 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 8 பேரும், முன்கள பணியாளர்கள் 5 பேரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 896 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 992 டோஸ் தடுப் பூசிகள் போடப்பட்டுள்ளது.

Similar News