செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் மேலும் 90 பேருக்கு பாதிப்பு- கொரோனாவுக்கு மூதாட்டி பலி

Published On 2021-07-31 02:46 GMT   |   Update On 2021-07-31 02:46 GMT
புதுவையில் குணமடைவது 97.71 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 317 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 90 பேருக்கு தொற்று உறுதியானது.

தற்போது 189 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 790 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 82 பேர் குணமடைந்தனர்.

அதேநேரத்தில் காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரியில் 62 வயது மூதாட்டி பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,793 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் குணமடைவது 97.71 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும் உள்ளது. அதேசமயம் 5 வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தை தொடர் சிகிச்சையில் உள்ளது.

நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என தலா 4 பேரும், பொதுமக்கள் 4 ஆயிரத்து 707 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 624 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News