செய்திகள்
கைது

பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

Published On 2021-07-30 10:34 GMT   |   Update On 2021-07-30 10:34 GMT
உருவையாறு- வில்லியனூர் ரோட்டில் கால்நடை மருத்துவமனை அருகே ஒரு வாலிபர் அந்த வழியாக சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிக்கொண்டு இருந்தார்.
புதுச்சேரி:

லாஸ்பேட்டை- நாவற்குளம் சந்திப்பில் பொதுமக்களுக்கு இடை யூறாக ஒரு கும்பல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு தகராறு செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தகராறில் ஈடுபட்ட 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கருவடிகுப்பம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த பச்சையப்பன் (வயது 23), நாவற்குளம் குரு சித்தானந்தா தெரு சீனிவாசன் (44) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பச்சமுத்து (73) என்பதும், இவர்கள் அங்குள்ள ஓம்சக்தி கோவில் நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் தகராறு செய்து தாக்கிக் கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உருவையாறு- வில்லியனூர் ரோட்டில் கால்நடை மருத்துவமனை அருகே ஒரு வாலிபர் அந்த வழியாக சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிக்கொண்டு இருந்தார்.

அப்போது ரோந்து சென்ற மங்கலம் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூடப்பாக்கம் அருகே உள்ள சேந்தநத்தம் மகாலட்சுமி நகரை சேர்ந்த அரவிந்த் (20) என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அரவிந்தை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News