செய்திகள்
கோப்புப்படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published On 2021-07-29 16:01 IST   |   Update On 2021-07-29 16:01:00 IST
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காணொளிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூகுள் மீட் செயலில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டைமாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்ததாவது,

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.7.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் காணொளிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூகுள் மீட் செயலில் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொளிக்காட்சி வாயிலாக கலந்துக்கொள்ளும் வண்ணம் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொளிக்காட்சி மூலம் முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளி விட்டு இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News