செய்திகள்
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகாசி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் வைரம். இவரது மகன் பாலகுரு (வயது 21). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாலகுரு சிவகாசி திருப்பினார். பின்னர் அவர் பெங்களூரு செல்லவில்லை. இந்த நிலையில் தீராத வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நோய் குணமாகாததால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.