செய்திகள்
ஆலத்தூர் ஊராட்சியில் மருத்துவ பரிசோதனை முகாம்
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் கிராமங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் கிராமங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்தார். முகாமில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் பகுதிகளை சேர்ந்த 200 பேருக்கு காய்ச்சல், சளி, நிமோனியா காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மருத்துவர் ஹரிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், ஊராட்சி செயலாளர் தமிழ்மணி மற்றும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் திருப்பயத்தங்குடி, விற்குடி ஊராட்சிகளில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.