செய்திகள்
மாதுளை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மலை ஆரஞ்சு, மாதுளை பழங்கள் விளைச்சல் அமோகம்

Published On 2021-07-23 15:02 IST   |   Update On 2021-07-23 15:02:00 IST
பழங்களை சாப்பிடுவதற்காக வெள்ளை மந்திகள், கரு மந்திகள் மற்றும் ஏராளமான பறவைகள் இந்த பகுதியில் முகாமிட்டு உள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் வண்ண வண்ண காளான்கள் மற்றும் அழகிய வண்ண பூக்கள் பூத்துள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் மலை ஆரஞ்சு பழங்களும், மலை மாதுளம் பழங்களும் அதிக அளவு பழுத்து தொங்குகின்றன.

இந்த பழங்களை சாப்பிடுவதற்காக வெள்ளை மந்திகள், கரு மந்திகள் மற்றும் ஏராளமான பறவைகள் இந்த பகுதியில் முகாமிட்டு உள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, “வறட்சியான நேரங்களில் மலைப்பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் மாதுளை பழம் மிக குறைந்த அளவே பழுக்கும். ஆனால் தற்போது பரவலாக மழை பெய்ததால் மலைப்பகுதியில் இந்த முறை அதிக அளவு பழங்கள் பழுத்துள்ளன. அடர்த்தியான வனப்பகுதியில் இத்தகைய பழங்கள் தொங்குவதால் இதனை வெளியாட்கள் யாரும் எடுக்க முடியாது. வன விலங்குகள் சாப்பிட்டது போக ஏராளமான பழங்கள் கீழே விழுந்து கிடக்கும்” என்று கூறினர்.

Similar News