செய்திகள்
கொரோனா தடுப்பூசி

233 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-07-17 17:30 IST   |   Update On 2021-07-17 17:30:00 IST
அருப்புக்கோட்டையை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள சாலியர் மகாஜன பரிபாலன சபை அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டையை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள சாலியர் மகாஜன பரிபாலன சபை அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இந்த முகாமில் முதல் தவணையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் ராஜேஸ் கண்ணன், நகர் நல மருத்துவர் கோமதி ஆகியோரது மேற்பார்வை மற்றும் ஆலோசனையின்படி பொதுமக்களுக்கு செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அய்யப்பன், சரத்பாபு, முத்துக்காமாட்சி, சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். இந்த முகாமில் மொத்தம் 233 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News