செய்திகள்
காரைக்குடி பகுதியில் விற்பனைக்காக வந்துள்ள மங்குஸ்தான் பழங்களை காணலாம்.

அதிக சத்துக்களை தரும் மங்குஸ்தான் பழங்கள்- காரைக்குடியில் கிலோ ரூ.400-க்கு விற்பனை

Published On 2021-07-08 10:38 GMT   |   Update On 2021-07-08 10:38 GMT
மங்குஸ்தான் பழங்கள் கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்து காரைக்குடி, பர்மா காலனி, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காரைக்குடி:

ஒவ்வொரு நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு அந்த நாட்டில் செடிகள், மரங்கள் வளர்கின்றன. அப்படிப்பட்ட மரங்கள் மனிதர்களுக்கு அதிக சத்துக்களை தரும் வகையில் சுவையான பழங்களை தருகிறது. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழமாகவும் உள்ளது மங்குஸ்தான் பழங்கள்.

இந்த பழங்கள் கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட குளிர் பகுதியில் அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பழங்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் வகையில் உள்ளது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் சராசரி எடையை பெறும். மனித உடலில் வைட்டமின் சி சத்து சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலில் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து பல்வேறு நோயில் இருந்து காக்க உதவும்.

இந்த வகையில் இந்த மங்குஸ்தான் பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகஅளவில் உள்ளதால் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதுதவிர மூலம், நாட்பட்ட மலச்சிக்கல், குளிர்ச்சி தன்மை, இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கும் சிறந்த பலனை கொடுக்கும்.

இந்த பழங்கள் கொடைக்கானல், கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்து காரைக்குடி, பர்மா காலனி, கோட்டையூர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பழம் கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News