செய்திகள்
பொன்னமராவதி ஒன்றியத்தில் கொரோனா பரிசோதனை கணக்கெடுக்கும் பணி
பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி, தேனூர், பகவாண்டிப்பட்டி, வார்பட்டு உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி, தேனூர், பகவாண்டிப்பட்டி, வார்பட்டு உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி செயலர்கள், பணித்தள பொறுப்பாளர், பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை உள்ளிட்டவைகளை எடுத்தனர்.