செய்திகள்
விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பலி
விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் சத்தியசீலன் (வயது 27). இவர் சம்பவத்தன்று கீழப்பழுவூர் அருகே உள்ள சுண்டக்குடி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அந்த வழியாக வந்த மினி பஸ் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சத்தியசீலன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.