செய்திகள்
அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 7 பேர் பலி - 226 பேர் பாதிப்பு
அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாவட்டத்தில் மேலும் 226 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மொத்தம் 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10,013 ஆக உயர்ந்துள்ளது. இதில் 78 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தலா 55 வயதுடைய ஆண்கள் 2 பேரும், 65 வயதுடைய பெண் ஒருவரும், ஆண்கள் 2 பேரும், 59 வயதுடைய ஆண் ஒருவரும், 60 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,693 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,235 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, கொரோனாவினால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் அரியலூர் அரசு மருத்துவமனையில் தான் அதிக உயிரிழப்புகள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.