செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஜெயங்கொண்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது நாளாக கொரோனா தடுப்பூசி

Published On 2021-05-26 16:58 IST   |   Update On 2021-05-26 16:58:00 IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஜெயங்கொண்டம்:

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள், முன்னுரிமைப் பணியாளர்களான பத்திரிகை வினியோகிக்கும் நபர்கள், பால் வினியோகம் செய்பவர்கள், தள்ளு வண்டி வியாபாரிகள், மருந்து கடைகளில் பணிபுரிவோர், ஆட்டோ டிரைவர்கள், கண்டக்டர்கள், மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி துறை பணியாளர்கள், உணவு வினியோக பணியாளர்கள், அத்தியாவசிய தொழிற்சாலை பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊடகத்தினர், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு வினியோகம் செய்யும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களுடன் அதிக அளவில் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 2-வது நாளாக நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இப்பணியை ஜெயங்கொண்டத்தில் மாவட்ட கலெக்டர் ரத்னா, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News