செய்திகள்
தொலைபேசி

முதியவர்கள்- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள்

Published On 2021-05-26 16:51 IST   |   Update On 2021-05-26 16:51:00 IST
தேவைப்படும் உதவிகளை தெரிவிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்து கொடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் கருதி முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ உதவி மற்றும் பிற உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04329-228840 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444437170 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தேவைப்படும் உதவிகளை தெரிவிக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் செய்து கொடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News