செய்திகள்
அபராதம்

விதிமுறைகளை மீறிய 7 கடைகளுக்கு அபராதம்

Published On 2021-05-23 17:50 IST   |   Update On 2021-05-23 17:50:00 IST
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் போலீசார் இணைந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறிய 4 காய்கறி கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.800 அபராதம் விதிக்கப்பட்டது. 3 மளிகை கடைகளுக்கு ரூ.500 வீதம் ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் மண்டல துணை தாசில்தார் கனகராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் குமார், முத்து பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News