செய்திகள்
கோப்புபடம்

செந்துறை அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை வீட்டில் வைத்து இறுச்சடங்கு முயற்சி

Published On 2021-05-23 17:21 IST   |   Update On 2021-05-23 17:21:00 IST
செந்துறை அருகே கொரோனாவால் இறந்தவர் உடலுக்கு யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்றும் இறுதி சடங்கு செய்யக்கூடாது என்றும் தடை விதித்தனர்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68). இவர் அந்த கிராமத்தில் ரைஸ்மில் நடத்தி வந்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்தது. அதைத்தொடர்ந்து உறவினர்கள் உடலை ஆம்புலன்சில் ஏற்றி வந்து வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு பந்தல் அமைத்து இறுதி சடங்கு செய்யவும் முடிவு செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த செந்துரை தாசில்தார் குமரய்யா வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு யாரும் அஞ்சலி செலுத்தக்கூடாது என்றும் இறுதி சடங்கு செய்யக்கூடாது என்றும் தடை விதித்தனர்.

அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடலை ஏற்றி சென்று தாசில்தார் முன்னிலையில் அரசு விதிமுறைகள் படி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் அச்சமின்றி உறவினர்கள் உடலை வீட்டில் வைத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News