செய்திகள்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் கொரோனாவை விரட்டலாம் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

Published On 2021-05-23 16:47 IST   |   Update On 2021-05-23 16:47:00 IST
தமிழகத்திலேயே கொரோனா இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை ஆக்குவதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்க பாண்டியன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

ராஜபாளையம் பகுதியில் முதலாவது தொற்றை விட 2-வது தொற்றில் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை விரைவாக கவனித்து உரிய முன்னேற்பாடுகள் செய்து அவை முற்றிலும் தடுக்க அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள 130 படுக்கைகள் 200 படுக்கைகளாக மாற்றவும், கூடுதலாக ஒரு கல்லூரியில் 200 படுக்கை வசதிகள் அமைத்து சிறப்பு வார்டாக மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

தினசரி காய்கறி சந்தையில் அதிகமாக கூட்டம் கூடு வதை தவிர்க்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் சென்ற ஆண்டு வாகனங்கள் ஏற்பாடு செய்து தெருத்தெருவாக காய்கறி விற்பனை நடத்தியதை போலவே இந்த ஆண்டும் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

இந்தியாவிலேயே அனைத்து கட்சிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆலோசனை நடத்திய பெருமை தமிழகத்தையே சேரும். தமிழகத்திலேயே கொரோனா இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை ஆக்குவதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

இதில் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News