செய்திகள்
மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு- விவசாயி கைது

Published On 2021-05-22 16:26 IST   |   Update On 2021-05-22 16:26:00 IST
வனவிலங்குகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க, தோட்டத்தை சுற்றி அமைத்து இருந்த மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரக வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் விவசாயிகள் கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து ஒரு யானை வெளியேறி கார்த்திகேயன் (வயது30) என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது, வனவிலங்குகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க அவர் தோட்டத்தை சுற்றி அமைத்து இருந்த மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக விவசாயி கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

Similar News