செய்திகள்
தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நகராட்சி சுகாதாரத் துறை ஊழியர் கிருமி நாசினி தெளித்தனர்

கூடலூரில் ஒரே நாளில் தோட்ட தொழிலாளர்கள் 17 பேருக்கு கொரோனா

Published On 2021-05-20 16:30 IST   |   Update On 2021-05-20 16:30:00 IST
கூடலூர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் வசிக்கும் 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மேலும் பலர் உயிரிழந்தனர். நகராட்சி பகுதியில் சளிவயல், மங்குழி, எம்.ஜி.ஆர். நகர், காசிம் வயல், அள்ளூர் வயல் உள்பட பல இடங்களில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து நகராட்சி சுகாதார துறையினர் தினமும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகளில் வசிக்கும் 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி ஆர்.டி.ஓ. ராஜகுமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், ஜென்மம் நில தாசில்தார் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை 11 மணிக்கு தனியார் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.

Similar News