செய்திகள்
ஒரே ஆக்சிஜனில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

பவானி அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஆக்சிஜனில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

Published On 2021-05-19 09:58 GMT   |   Update On 2021-05-19 09:58 GMT
பவானி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தற்போது 46 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பவானி:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தற்போது மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அவர்கள் பலவேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதே போல் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அந்தியூர், பவானி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பவானி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தற்போது 46 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 10 படுக்கைகளில் மட்டுமே ஆக்சிஜன் வழங்கும் வசதி உள்ளது. மற்ற படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி இல்லை. ஆனால் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் பலர் சுவாச பிரச்சனையால் அவதிபட்டனர்.

அவர்கள் ஆக்சிஜன் வசதி வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள் இருதய துடிப்பை கண்டறியும் ஸ்டெதஸ்கோப்பை பயன்படுத்தி ஒரே சமயத்தில் 2 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கினர். இதனால் நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்தனர்.

செவிலியர்களின் இந்த முயற்சியை மற்ற நோயாளிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News